என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாநாடு பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டும் பணி
    X

    அ.தி.மு.க. மாநாடு பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டும் பணி

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கான பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டும் பணி கரூரில் தொடங்கியது
    • முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    மதுரையில் அதிமுக மாநாடு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கரூரில் மாநாடு தொடர்பாக 100 ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்யும் பணியினை முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அவைத்தலைவர் திருவிகா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் . இந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் தி.மு.க. ஆட்சியை விட்டு அகற்றப்படும். மாநாட்டிற்காக சுவர் விளம்பரமும் செய்து வருகிறோம் அதை சிலர் தடுத்து வருகின்றனர் . அதனால் மாநாட்டு கூட்டத்தை தடுத்து விட முடியாது. அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் மீறி பேருந்து முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். இது வரை முறை மீறிய செயல். இதனால் விபத்துக்கள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×