search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகளூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
    X

    புகளூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு

    • புகளூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
    • விரைந்து சரி செய்து தருவதாக நிர்வாகம் உறுதி

    கரூர்:

    கரூர் மாவட்டம், புகளூரில் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புகளூர் வாய்க்காலில் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் கரி துகள்களால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 7-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து நேற்று புகளூர் தாசில்தார் மோகன்ராஜ், புகளூர் நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையர் கனிராஜ், காவல் ஆய்வாளர் வினோதினி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சர்க்கரை ஆலைக்குள் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆலையில் இருந்து கரி துகள்கள், கரும்பு சக்கை துகள்கள் வெளியேறுவதையும், ஆலையின் கழிவு நீர் புகளூர் வாய்க்காலில் கலக்கப்படுவதையும் பார்வையிட்டனர். அப்போது ஆலை நிர்வாக நிர்வாகிகள் அனைத்தையும் விரைந்து சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காதவாறு விரைந்து சரி செய்து கொடுக்குமாறு ஆலை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    Next Story
    ×