என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே குடும்ப தகராறில் 3 பேர் கைது
- குளித்தலை அருகே குடும்ப தகராறில் 3 பேர் கைது செய்யபட்டனர்
- காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே, சேப்ளாப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், (வயது 27). மனைவி சத்யா. கணவன், மனைவிக்கிடையே நடந்த குடும்ப தகராறு காரணமாக சத்யா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், சத்யாவை அழைத்து செல்லுமாறு அவரது அண்ணன் சக்திவேல் (29), செந்தில்கு மாரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, செந்தில்குமார், அவரது தந்தை மணி, பெரியப்பா பாலகிருஷ்ணன் ஆகியோர் சத்யா வீட்டுக்கு சென்றனர்.
அப்போது, சத்யாவின் உறவினர்களான சக்திவேல், முருகானந்தம், (25), சண்முகம் (60), ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை, தாக்கியுள்ளனர். தகவலறிந்த செந்தில்குமாரின் தம்பி மகேந்திரன் அங்கு சென்றபோது அவரையும், தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் சக்திவேல், முருகானந்தம், சண்முகம் ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.