என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி

- மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலியாகினர்.
- ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலியாகினர்.மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலியாகினர்.கரூர்:
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூர் கஸ்பா பகுதிைய சேர்ந்தவர் கருப்பையா (வயது 45). ஆடு வியாபாரி. இவர் சொந்த வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலைக்கு வந்து விட்டு இனுங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி சிறுகமணியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர்கள் 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் இனுங்கூரில் இருந்து பெட்டவாய்த்தலைக்கு வந்து கொண்டிருந்தனர். நச்சலூர் அருகே பொய்யாமணி ஊராட்சி பங்களாபுத்தூர் என்ற இடத்தில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சதீஷ்குமார், ரமேஷ் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், ரமேஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.இதனால் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரமேஷ் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்."