என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் டிரைவருக்கு திடீர் வலிப்பு: பூட்டிய கடைக்குள் புகுந்த தனியார் பஸ் -19 பேர் காயம்
    X

    கடைக்குள் புகுந்த பஸ்சை படத்தில் காணலாம். 

    காரைக்காலில் டிரைவருக்கு திடீர் வலிப்பு: பூட்டிய கடைக்குள் புகுந்த தனியார் பஸ் -19 பேர் காயம்

    • செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே அம்பகரத்தூரிலிருந்து, தனியார் பஸ் ஒன்று காரைக்கால் நோக்கி சென்றது. இந்த பஸ்சை அய்யப்பன்(வயது40) என்பவர் ஓட்டி வந்தார். செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, பின்னர், பூட்டி இருந்த கடையில் மோதி நின்றது.

    இதில் டிரைவர் அய் யப்பன், கண்டக்டர் மகேஸ்வரன்(41) மற்றும் 17 பயணிகள் என மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை, அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அனை வரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் இது குறித்து, காரை க்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×