search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்ட இறுதி பட்டியல் இன்று வெளியீடு: 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் உள்ளனர்
    X

    கோப்பு படம்.

    குமரி மாவட்ட இறுதி பட்டியல் இன்று வெளியீடு: 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் உள்ளனர்

    ஆண்களை விட பெண்களே அதிகம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் தி.மு.க.சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த்,அதிமுக சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் மணிகண்டன் உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 71 ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 74 ஆயிரத்து 615 பெண் வாக்காளர்களும், 142 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 46ஆயிரத்து581 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 389 பேரும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,215 பேரும் இதர வாக்காளர்கள் 67 பேரும் இடம் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக பத்மநாப புரம் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 05வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,766 ஆண்வாக்காளர்களும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 214 பெண் வாக்காளர்களும் 25 இதர வாக்காளர்கள் என இரண்டு லட்சத்து 38 ஆயிரத்து 05 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 890 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 540 பெண் வாக்காளர்கள் 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 443பேர் உள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 33ஆயிரத்து 728ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 921பேர் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து697 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 24,994 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்களின் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 694 பேர் உள்ளனர்.

    கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 354 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 21,473 பெண் வாக்காளர்களும் 20 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,45,847 பேர்உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகரி சிவப்பி ரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோரிடம் இருந்தனர்.

    Next Story
    ×