search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி
    X

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டி

    • நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 11-ந்தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 12-ந் தேதி அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஒரு கல் லூரிக்கு இரண்டு மாண வர்கள் பெயர்ப்பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டிக்கு பள்ளிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளும், கல்லூரிக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய் மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் பள்ளி களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்புகளும், கல்லூரிக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற் காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

    கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர் கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப் புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×