search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுருளோட்டில் 106.2 மில்லி மீட்டர் மழை
    X

    சுருளோட்டில் 106.2 மில்லி மீட்டர் மழை

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 19.40 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுருளோடு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 106.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    களியல், கன்னிமார், குழித்துறை, தக்கலை, புத்தன்அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங் களில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. 400-க்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந் துள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 19.40 அடியாக உள்ளது. அணைக்கு 984 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. அணைக்கு 561 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 46.8, பெருஞ்சாணி 98.8, சிற்றார் 1-30.2, சிற்றார் 2- 36.4, பூதப்பாண்டி 20.4, களியல் 9.4, கன்னிமார் 28.8, குழித்துறை 12, நாகர்கோவில் 1.2, புத்தன் அணை 92.6, சுருளோடு 106.2, தக்கலை 6.3, குளச்சல் 18.8, பாலமோர் 26.2, மாம்பழத்துறையாறு 3.7, திற்பரப்பு 4.3, அடையா மடை 9, முள்ளாங்கி னாவிளை 6.2, ஆணைக் கிடங்கு 2, முக்கடல் 53.

    மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான விதைகள் தங்கு தடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேறெ்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×