என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
- அஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில் :
வேளிமலை பெருஞ் சிலம்பு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 28). இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜித், பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து வெட்டூர்ணிமடம் நோக்கி சென்றபோது முன்னாள் சென்ற மற்றொரு பைக் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜித் படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான அஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






