search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டம் இரட்டை கொலையில்  வாலிபர் கைது
    X

    முட்டம் இரட்டை கொலையில் வாலிபர் கைது

    • பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட விரோதத்தில் கொன்றது அம்பலம்
    • கொலையாளி பயன்படுத்திய மங்கி குல்லாவை கைப்பற்றி விசாரணை

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவுலின்மேரி (வயது 48).

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2-வது மகன் சென்னையில் படித்து வருகிறார். இதனால் முட்டத்தில் உள்ள வீட்டில் பவுலின்மேரியும், அவரது தாயார் தெரசம்மாளும் வசித்து வந்தனர்.

    கடந்த 6-ந்தேதி பவுலின் மேரி, தெரசம்மாள் இரு வரும் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கொலையாளி பயன்படுத்திய மங்கி குல்லாவை கைப் பற்றி விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு கோணங்களில் விசா ரணை மேற்கொண்ட போலீசார் இரட்டைக் கொலை தொடர்பாக கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அமலசுமன் (35) என்பவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளி யாகி உள்ளது. போலீசாரிடம் அமலசுமன் கூறியதாவது:-

    கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி தையல் வகுப்பு நடத்தி வந்தார். அந்த தையல் வகுப்பிற்கு வந்த பெண்ணி டம் நான் தகராறு செய்தேன். இதை அந்த பெண் பவுலின் மேரியிடம் கூறினார்.

    இதை பவுலின்மேரி என்னிடம் தட்டிக்கேட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்ப வத்தன்று பவுலின் மேரி வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இருந்த அவர், என்னிடம் தகராறில் ஈடுபட்டதால் தீர்த்துக் கட்டினேன். இதை வீட்டில் இருந்த அவரது தாயார் பார்த்தார். இதனால் அவரை அயன்பாக்சால் தாக்கினேன்.

    பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். கொள்ளையடித்த நகையை அந்த பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் அமலசுமன் அடகு வைத்த நகையை மீட்டனர்.

    கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தையல் வகுப்பிற்கு வந்த பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் ஒருவர் தன்னிடம் அமலசுமன் தகராறில் ஈடுபட்ட தாகவும், அதை பவுலின்மேரியிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

    தகராறில் ஈடுபட்ட அமலசுமன் போட்டோவை செல்போனில் எடுத்து இருப்பதாக தெரிவித்தார். அப்போது போலீசார் அந்த புகைப்படத்தை பார்த்தனர். அதில் பவுலின்மேரி வீட்டில் இருந்து முக்கிய தடயமாக சிக்கிய மங்கி குல்லா அமலசுமன் வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதனால் அமல சுமன்தான் கொலையாளி என்பதை போலீசார் முடிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த அமல சுமன் தலைமறைவாகி இருந்தார். எனவே அவர்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் உறுதி செய்தனர். இந்த நிலையில் அமலசுமனை கைது செய்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    Next Story
    ×