search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பெண்களை தாக்கி நகை பறித்த வாலிபர் கைது
    X

    குமரி மாவட்டத்தில் பெண்களை தாக்கி நகை பறித்த வாலிபர் கைது

    • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினார்
    • விக்கியிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் கைப்பற்றியுள்ளனர்

    குழித்துறை :

    குமரி மாவட்டத்தில் சாலை களில் நடந்து செல்லும் பெண் களை தாக்கி நகை பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிளில் வரும் வாலிபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.

    இந்த நிலையில் மார்த்தாண் டம் பகுதியில் நேற்று இரவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசா ருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண் களை, தனது மோட்டார் சைக்கிளால் இடித்து கீழே தள்ளிவிட்டு, அவர்கள் சுதாரிப்ப தற்குள், கழுத்தில் கிடக்கும் நகைளை பறித்துச் செல்வதை தொழிலாக கொண்டுள்ளார் என்பது விசாரணையில் கண்டறி யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீ சார், அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், நாகர்கோ விலை அடுத்த மேல புத்தேரி கீழக்கலுங்கடி பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மார்த்தாண்டம் ெரயில்வே நிலைய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்த ஆசிரியை ஒருவரை தாக்கி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்தது, ஞாறான்விளை அகதிகள் முகாமை சேர்ந்த ராஜஸ்ரீ (37) என்பவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தது போன்ற வற்றில் விக்கி தான் ஈடுபட் டுள்ளார் என்பதும் உறுதியானது.

    மேலும் இவர் மீது கருங்கல் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் பல இடங்களில் விக்கி ரோமியோவாக வலம் வந்து, பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை மறைவான இடங்க ளுக்கு அழைத்துச் சென்று தங்க சங்கிலியை பறித்து செல்லும் செயலிலும் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. விக்கியிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×