என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை ரெயில் நிலையத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    குழித்துறை ரெயில் நிலையத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில்வே தண்டவாளத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    நாகர்கோவில் :

    விளவங்கோடு அருகே பாகோடு பண்டாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 55). இவர் நேற்று மாலை குழித்துறை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜான்சனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஜான்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜான்சன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×