search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் பரவலாக மழை - திற்பரப்பில் 36 மி.மீ. பதிவு
    X

    குமரியில் பரவலாக மழை - திற்பரப்பில் 36 மி.மீ. பதிவு

    • கடந்த 2 நாட்களாக மதியத்துக்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை
    • அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மதியத்துக்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    களியல், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. அடையாமடை குருந்தன்கோடு, குழித்துறை பகுதியிலும் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.04 அடியாக இருந்தது. அணைக்கு 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 531 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33 அடியாக உள்ளது.அணைக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 17.2, பெருஞ்சாணி 23, சிற்றாறு 1-10.6, சிற்றார் 2-7.4, களியல் 36, கன்னிமார் 4.6, புத்தன் அணை 22.4, பாலமோர் 12.4, திற்பரப்பு 36, அடையாமடை 5.2, முள்ளங்கினாவிளை 5.8, ஆணை கிடங்கு 1.

    மாவட்டம் முழுவதும் இன்று காலையில் வழக்கம் போல் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது.

    Next Story
    ×