search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை தேடி சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    X

    பொதுமக்களை தேடி சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    • புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
    • குடும்ப அட்டை பெறாத கடைக்கோடி கிராமமக்களுக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட கைத்தறித்துறை நாகர்கோ வில் சரகம் சார்பில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட ரங்கில் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ கலந்து கொண்டு கைத்தறி நெசவா ளர்களுக்கு வீடு கட்டுவதற்கு மானியத்தொகை வழங்கு வதற்கான பணி ஆணையினை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு துறைகளின் வாயிலாக அனைத்துத்தரப்பட்ட பொதுமக்களையும் தேடிச் சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, கடந்த 10 ஆண்டு காலக்கட்டத்தில் முடக்கி வைக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றியதோடு, பல்வேறு புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 2 ஆண்டு களில் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுநாள் வரை குடும்ப அட்டை பெறாத கடைக்கோடி கிராமமக்களுக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கைத்தறி நெசவாளர்களின் வறுமையினை தெரிந்து கொண்ட தமிழ்நாடு முதல்- அமைச்சர் நெசவா ளர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஆணைப்பிறப்பித்து செயல் படுத்தி வருகிறார்கள்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அறிவிப்புகள் 06.09.2021 தேதி நடைபெற்ற மானிய கோரிக்கையில் ஆண்டுக்கு ரூ.21 கோடி கூடுதல் செலவினத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தி நகர்புற நெசவாளர்களுக்கும் விரிவுப்ப டுத்தப்படும் என அறிவிக்கப் பட்டது.

    அதன் அடிப்படையில், இன்றைய தினம் முதற் கட்டமாக நாகர்கோவில் மாநகராட்சி, குழித்துறை மற்றும் குளச்சல் நகராட்சி யினை சேர்ந்த 21 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.4 லட்சம் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் 21 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கைத்தறித்துறை உதவி இயக்குநர் சங்கரேஸ்வரி, கைத்தறி அலுவலர் கவிதா, கைத்தறி ஆய்வாளர் தங்க சாமி, பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×