என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோட்டார் ரெயில் நிலையம் முன்பு விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் காங்கிரசார் நாளை ஆர்ப்பாட்டம் - ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரி நடக்கிறது
  X

  கோட்டார் ரெயில் நிலையம் முன்பு விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் காங்கிரசார் நாளை ஆர்ப்பாட்டம் - ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டவுன் ரெயில் நிலையம் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர்.
  • ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்வது

  நாகர்கோவில் :

  விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

  கடந்த பல ஆண்டுகளாக ரெயில்வே துறை சம்பந்தமாக குமரி மாவட்ட மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும். அதை பரிசீலிக்க மறுக்கும் ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை 19-ந்தேதி மாலை 4.30 மணியளவில் கோட்டார் ரெயில் நிலையம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

  குமரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில், தாம்பரம்- நாகர்கோவில் தினசரி ரெயிலாக மாற்றுவது, ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்வது என புதிய ரெயில் தேவைகள் நிலுவையில் உள்ளது.

  மேலும் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றி பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த ெரயில் நிலையத்திற்கு செல்லும் இணைப்பு சாலை கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. கொரோனா காலத்திற்கு முன் நின்று சென்றதை போன்று மீண் டும் அனைத்து ெரயில் நிலை யங்களிலும் ரெயில்கள் நின்று செல்லவேண்டும். குறிப்பாக மதுரை - புனலூர் ரெயில் நின்று செல்ல வேண்டும். ரெயில்வே கேட்டில் நேரம் விரயமாவதை தவிர்க்க ரெயில்வே மேம்பாலங்கள் பல இடங்களில் அமைக்க வேண்டும் என்று மக்களின் பல நாள் கோரிக்கை நிலு வையில் உள்ளது. நாகர் கோவில் கோட்டார் ெரயில் நிலையம் பின்புறம் உள்ள ஊட்டுவாழ்மடம் செல்ல ஒரு மேம்பாலம் மிகவும் அவசியம்.

  இந்த கோரிக்கைளை மத்திய ெரயில்வே துறை அமைச்சர், அமைச்சகம், ரெயில்வே துறை அதிகாரிகள் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் நடவ டிக்கைகள் தாமதமாகிறது.

  கடந்த 4 ஆண்டுகளில் மறைந்த முன்னாள் எம். பி. வசந்தகுமார் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த போதும், பின்னர் விஜய் வசந்த் எம்.பி. ஆன பின்னரும் குமரி மாவட்டத்தில் உள்ள ெரயில்வே கோரிக் கைகள் நிலுவையில் உள் ளது. ஆகையால் ரெயில்வே துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதி வழியில் போராட்டத்தை நடத்த குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட மற்றும் நாகர் கோவில் மாநகர மாவட்ட கமிட்டிகள் இணைந்து தீர் மானம் எடுத்துள்ளது.

  விஜய் வசந்த் எம்.பி. தலைமை வகிக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி உதயம், பினுலால் சிங், நவீன் குமார். ஆகியோர் முன்னிலை வகிக் கின்றனர். அனைத்து வட். டார, நகர தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், மக ளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், பேரூராட்சி பஞ்சாயத்து தலைவர்கள் மற்ற துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள் ளும் இந்த ஆர்ப்பாட்டத் தில் பொதுமக்கள் பெருந் திரளாக கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×