என் மலர்
உள்ளூர் செய்திகள்

பத்துகாணி மலை பகுதியில் காளிமலைக்கு செல்லும் பாதையில் அனுமதியின்றி அபிவிருத்தி பணிகள் - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
- கழிப்பறை ஓய்வெடுக்கும் பகுதி என்று மலைப்பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அபிவிருத்தி பணிகள் செய்துவந்தனர்.
- அனுமதி பெறாமல் தொடர்ந்து எவ்வித பணியும் செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
கன்னியாகுமரி :
பத்துகாணி காளி மலையில்சித்திர பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பத்து காணியிலிருந்து காளி மலைக்கு செல்லக்கூடிய பாதை மற்றும் ஊற்றுக்குழி என்ற பகுதியில் கழிப்பறை ஓய்வெடுக்கும் பகுதி என்று மலைப்பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அபிவிருத்தி பணிகள் செய்துவந்தனர்.
இத்தகவலை அறிந்து விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல் மற்றும் அருமனை ஆய்வாளர் முருகன் ஆறுகாணி காவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதி இன்றி தொடங்கிய பணியை தடுத்து நிறுத்தியதோடு அனுமதிபெறாமல் தொடர்ந்து எவ்வித பணியும் செய்யக்கூடாது என்றுஎச்சரித்துள்ளனர். அனுமதி இல்லாமல் பணி தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story






