search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மீனவர் தினவிழாவில்  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

     உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 

    உலக மீனவர் தினவிழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • முட்டத்தில் இன்று மாலை நடக்கிறது
    • 2 அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்

    நாகர்கோவில்:

    புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர்.

    சூழலியல் மாற்றங்கள் அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் குரல் கொடுக் கும் வகையிலும் மீனவ மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் அன்று முதல் ஆண்டுதோறும் நவம்பர் 21-ந் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழா கொண்டாட் டமாக உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மீனவர் தினத்தை குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மீனவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான மீனவர் தினவிழா கொண் டாட்டம் முட்டம் கடற்கரை மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்குகிறார். முட்டம் துணைத்தலைவர் சகாயராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின், தாரகை கட்பட் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசுகிறார்.

    கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரை யாற்றுகிறார். விழாவில் தி.மு.க. இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்று கிறார்கள்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தமிழ்நாடு மாநில தலைமை மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், அருள் எழிலன், ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தளவாய்சுந்தரம், விஜய தரணி, ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ் முன்னாள் மீனவர்கள் செயலாளர் நசரேத் பசலியான், உள் நாட்டு மீனவர் அமைப் பின் இயக்குனர் ஜோஷ் ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். உள்நாட்டு மீனவர்அமைப்பு இயக்குனர் வெனிஸ் மைக்கேல்ராஜ் நன்றி கூறுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை சர்ச்சில், குறும்பனை பெர்லின், நாஞ்சில் மைக்கேல் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

    Next Story
    ×