search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிகுளம்-பீச் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி
    X

    செட்டிகுளம்-பீச் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி

      நாகர்கோவில்:

      கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் கோவில் ஆலயம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக நேற்று முதல் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இதையடுத்து கோட்டார் சாலையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சாலை மூடப்பட்டு உள்ளது.

      இதேபோல் சவேரியார் ஆலயம் பகுதியிலும் சாலைகள் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது. வடசேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம், சவேரியார் ஆலயம் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.

      கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம் சாலை, ராமன்புதூர் வழியாக செட்டி குளத்திற்கு வருகிறது. பஸ் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதால் செட்டிகுளம், பீச் ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாக னங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

      போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று வாகனங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் கடும் அவ திக்கு ஆளாகி உள்ளனர்.வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டியதால் பள்ளி வாகனங்கள் அதிகாலையிலேயே மாணவ மாணவிகளை ஏற்றி பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை வேலை நடைபெறும் பகுதியிலும் பள்ளி ஒன்று உள்ளது. இந்த மாணவ மாணவிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

      நேற்று தொடங்கிய வேலை 5 நாட்களில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று வேலை தொடங்கி சிறிது நேரம் மட்டுமே பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ஒரு குழி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வேலை மந்தமான நிலையிலேயே நடந்து வருகிறது.

      பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதி அந்த சாலையில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரவு பகலாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      இந்த விவகாரத்தில் மேயர் மகேஷ் பார்வையிட்டு பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

      Next Story
      ×