search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவேரியார் ஆலய சாலையில் மீண்டும் போக்குவரத்து
    X

    சவேரியார் ஆலய சாலையில் மீண்டும் போக்குவரத்து

    • பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில் சிக்கிய அரசு பஸ்
    • போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 95 சதவீதம் நிறை வடைந்துள்ளது. இறுதி கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தற்போது சவேரியார் ஆலய பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்ததையடுத்து பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்ததால் செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து மேயர் மகேஷின் அதிரடி நடவ டிக்கையின் காரணமாக அந்த பணிகள் துரிதப்ப டுத்தப் பட்டது. தற்பொ ழுது பணி கள் முடிந்து அந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைக்கு பைப்லைன் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத் தில் ஜல்லிக்கொட்டப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாக ஒரு வாகனம் மட்டுமே சென்று வரக்கூடிய அளவில் தற்போது பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து போக்கு வரத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள னர். இந்த நிலையில் இன்று காலை அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று அந்த பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடி யாக அந்த பஸ்சை அப்பு றப்படுத்த அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய பஸ்சை மீட்டு எடுத்தனர்.

    இதே போல் நாகர்கோவி லில் இருந்து ராஜாவூருக்கு சென்ற அரசு பஸ்சும் அந்த பள்ளத்தில் சிக்கியது.பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பஸ்கள் அந்த இடத்தில் சிக்கித் தவித்து வருகிறது. எனவே அந்த பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை யாக உள்ளது.

    அந்த பகுதியில் வேலையை விரைந்து முடித்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து மக்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    Next Story
    ×