search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    • குழித்துறையில் 40.5 மி.மீ. மழை
    • அணைகளில் இருந்து 759 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக சாரல் மழை பெய்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக இரவு நேரங் களில் குளு குளு சீசன் நிலவுகிறது. குழித்துறை பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 40.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கொட்டாரம், மயிலாடி, கோழிப்போர் விளை, குருந்தன்கோடு, முள்ளங் கினாவிளை, அடையா மடை பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்ப குதியிலும் மலையோர பகுதி யான பாலமோர் பகுதி யிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக 759 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் விடப்பட்டு வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதி யில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்ப தற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்திருந்த னர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந் தனர

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 38.07 அடியாக உள்ளது. அணைக்கு 413 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 584 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.30 அடியாக உள்ளது. அணைக்கு 191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 175 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.15 அடியாகவும் சிற்றாறு-2 அணை யின் நீர்மட்டம் 11.15 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.60 அடி யாகவும், மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் 29.04 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை 6.60 அடியாக உள்ளது.

    Next Story
    ×