என் மலர்
உள்ளூர் செய்திகள்

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- 2 நாள் விடுமுறைையயொட்டி திரண்டனர்
- சிறுவர்கள் நீச்சல்குளத்தில் அதிக அளவில் குளித்து பொழுதை கழித்தார்கள்.
கன்னியாகுமரி:
கடந்த சில நாட்களாக குலசேகரம், திற்பரப்பு, பெருஞ்சாணி பேச்சிபாறை, போன்ற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி களின் கூட்டம் அலை மோதுகிறது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநில மான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகி றார்கள். நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து ஆனந்த மாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர் கள் விளையாடி மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் நீச்சல்குளத் தில் அதிக அளவில் குளித்து பொழுதை கழித்தார்கள்.அவர்களுக்கு பாதுகாப்பாக குளிக்க காற்று நிரப்பிய கார் டியூப்புகளும் வைக்கப் பட்டு உள்ளன. பாதுகாப்பு போலீசாரும் நிறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது குளிப்பதற்கு ஏற்ற சீசன் தொடங்கப்பட்டு உள்ளது.
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு ஆசியாவிலே மிகவும் உயரமும் நீளமுமான மாத்தூர் தொட்டில் பாலத் தில் சென்று ஒரு பகுதியில் இருந்து மறுபகுதி வரை பாலத்தின் மேற்பகுதியில் நடந்து சென்று பார்வை யிடுகிறார்கள்.
பாலத்தின் கீழ்பகுதியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுகிறார்கள்.






