search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரில் ஓடும் பஸ்ஸில் ரூ.40 ஆயிரம் திருட்டு
    X

    நாகரில் ஓடும் பஸ்ஸில் ரூ.40 ஆயிரம் திருட்டு

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • பெண் கொள்ளையர்கள் கைவரிசையா?

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் இட லாக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடுக்கரையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.40 ஆயிரம் எடுத்துவிட்டு அங்கிருந்து பஸ்ஸில் ஊருக்கு புறப்பட்டார்.

    அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கிய இளம்பெண் பின்னர் இடலாகுடிக்கு செல்லும் பஸ்ஸில் ஏறினார். இடலாக்குடி பகுதியில் பஸ்சை விட்டு இறங்கிய போது தான் வைத்திருந்த கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ. 40 ஆயிரம் மாயமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். அவர் அந்த பகுதியில் பணத்தை தேடினார். ஆனால் பணம் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பணத்தை பறிகொடுத்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அண்ணா பஸ் நிலையத்திலிருந்து பஸ்சில் தன்னுடன் 2 பெண்கள் நெருக்கி கொண்டு இருந்ததாகவும் அவர்கள் திடீரென தான் இறங்குவதற்கு முந்தைய பஸ் நிறுத்தத்தில் இறங்கிவிட்டதாகவும் கூறினார். எனவே அந்தப் பெண்கள் தான் பணத்தை திருடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.

    இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண்ணிடம் கைவரிசை காட்டியது வெளியூரை சேர்ந்த பெண் கொள்ளையராக இருக்க லாம் என்று போலீ சார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் பழைய பெண் கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே அண்ணா பஸ்நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பிக்பாக்கெட், திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனி கவனம் செலுத்தி கூடுதல் போலீசாரை நியமனம் செய்து ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    Next Story
    ×