search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட வரலாறுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - கலெக்டர் அரவிந்த் பேச்சு
    X

    இளைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட வரலாறுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - கலெக்டர் அரவிந்த் பேச்சு

    • தேச தலைவர்களின் வேடம் அணிந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது
    • சுதந்திரம் கிடைப்பதற்காக பாடுபட்ட தலைவர்கள், போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், வரலாறுகள் குறித்தும் தெரிந்துக் கொள்வதே ஆகும்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்றது.

    மாவட்ட கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள். பணியாளர்கள். மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்க ளிலும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 01.07.2022 அன்று புனித ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல் நிலைப்பள்ளி. திறந்தவெளி கலையரங்கில் பள்ளி மாணவியர்கள் ஒருசேர தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியினையும், நாகர்கோவில், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மூவர்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும், தேச தலைவர்களின் வேடம் அணிந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப் பட்டது.

    லூர்தம்மாள் சைமன் பாலத்திலும், நாகர்கோவில் புத்தேரி மேம்பாலத்திலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்துறையின் சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் எதிர்கால தலை முறையினர்களான மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் நிகழ்ச்சிகள், அலு வலர்கள் மற்றும் பணியாளர் களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் வருவாய் துறையின் சார்பில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகளும், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் மாணவ. மாணவியர்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளின் வாயிலாக பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் 15வது நாளான இன்று அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் நோக்கமே வருங்கால இளைய தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் உட்பட நாம் அனைவரும் நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக பாடுபட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாகவும், சுதந்திர போராட்ட வரலாறுகள் குறித்தும் தெரிந்துக் கொள்வதே ஆகும். இவ்வாறு அவர் பேசினார். மாட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×