என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் விவசாயிகள் நெல் விதைக்கும் போராட்டம்
    X

    நடுரோட்டில் விவசாயிகள் நெல் விதைக்கும் போராட்டம்

    • கொட்டாரத்தில் இன்று காலை நடந்தது
    • கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் முழுக்க முழுக்க விவசாய பாசன பகுதி நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு ஆயிரக்க ணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிர் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி, கும்பபூ சாகுபடி ஆகிய இரு சாகுபடிகள் நடந்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி தொடங்கி உள்ளது.

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியி லும் கன்னிபூ சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கன்னி பூ சாகுபடி பாசன வசதிக்காக பேச்சிப் பாறை அணை கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி திறக்கப் பட்டது.

    ஆனால் தோவாளை சானலின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப் பிளாக்புரவு பகுதிக்கு இதுவரை சரியாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் கொட்டா ரம் ஜேக்கப் பிளாக் கடை வரம்பு பகுதி விவசாயிகள் கன்னிபூ சாகுபடிக்காக நெல் விதைகளை வயல்களில் விதைக்க முடியாமல் பரித வித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து தோவாளை சானலின் கடைவரம்பு பகுதியான ஜேக்கப் பிளாக் புரவு பகுதிக்கு விவசாய பாசனத் திற்காக தண்ணீர் திறந்து விட கோரி இன்று காலை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே நடு ரோட்டில் நெல் விதைகளை வீசி "திடீர்" என்று போராட்டம் நடத்தினார்கள்.

    இதில் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் பெருமாள் நாடார் மற்றும் விவசாயிகள் பாலசுப்பிரமணியம், லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் நடுரோட்டில் நெல்மணி விதைகளை வீசி போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×