search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை அமோகம்
    X

    தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை அமோகம்

    • மல்லி கிலோ ரூ.1700
    • வியாபாரிகள் குவிந்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், மாடன் நாடார் குடியிருப்பு, ஆவரைகுளம், குமாரபுரம், ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும் சங்கரன் கோவில், ராஜபாளையம், வத்தலக்குண்டு, மதுரை, மானாமதுரை, கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்கு வருகிறது.

    சேலத்தில் இருந்து மஞ்சள் அரளியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கேந்தி பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளி யங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதிகளில்இருந்து பச்சை, துளசியும் தோவாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தாமரை, கோழிக்கொண்டை, அரளி, சம்மங்கி ஆகிய பூக்கள் சந்தைக்கு வருகிறது.

    இங்கிருந்து குமரி மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங் களுக்கு விற்பனை ஆகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வந்தது. இன்று வியாபாரிகள், பொதுமக்களும், அரசு அலுவலர்களும், தோவாளை சந்தையில் பூக்களை வாங்கி சென்றனர்.

    இன்றைக்கு பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.800, மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1700, அரளி ரூ.300, சம்பங்கி ரூ. 500 கோழிக்கொண்டை ரூ.50, பட்டர் ரோஸ் ரூ. 750, சிவப்பு கேந்தி ரூ. 55, மஞ்சள் கேந்தி ரூ.40, துளசி ரூ.30, கொழுந்து ரூ.90, பச்சை ரூ.8, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.1600 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரி கள் கூறும் போது விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல ஓணத்தை முன்னிட்டும் பூக்கள் விலை இதைவிட கூடும் என்றும் தெரிவித்தனர் மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100 டன் வரை பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பூக்கள் வரத்து அதிகம் வியாபாரிகள் கூட்டத்தால் வியாபாரம் சூடு பிடித்தது.

    Next Story
    ×