search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்களை தடுப்பதில் மாணவ-மாணவிகளின் பங்கு முக்கியமானது
    X

    போதை பொருட்களை தடுப்பதில் மாணவ-மாணவிகளின் பங்கு முக்கியமானது

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சு
    • பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் பழக்க த்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி கள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து தற்போது கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் கொரியர் மூலமாகவும் ரெயில் மூலமாகவும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பொருட்கள் குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

    இதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிர சாத் நடவடிக்கை மேற்கொண்டார். கஞ்சா மற்றும் குட்கா புகையிலை குறித்து தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட போலீஸ் சார்பில் வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

    7010363173 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்து உள்ளார்.

    இது தொடர்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விழிப்பு ணர்வு பேனர்களும் வழங்க ப்பட்டு உள்ளது. நாகர்கோ வில் பொன்ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாணவ மாணவிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். சைபர் குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டும்.

    செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஒரு வழி பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரே மோட்டார் சைக்கிளில் 3 செல்லக் கூடாது. அதிவேக மாக சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணிவதன் மூலம் உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.போதை பொருட்கள்விற்பனை குறித்து தெரிந்தால் உடனடி யாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதை இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டத்தை மாற்ற மாணவ-மாணவி களின் பங்கு முக்கியமானது ஆகும். அதற்கு நீங்கள் அனை வரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×