search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் வழி தவறி வந்த வாலிபரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
    X

    தக்கலையில் வழி தவறி வந்த வாலிபரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

    • வீட்டிற்கு போக வழி தெரியாமல் 15 கிலோ மீட்டர் நடந்து தக்கலை வந்துள்ளார்
    • குளிக்க சென்றவர் காணவில்லை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை காமராஜர் சிலை அருகே சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிய நிலையில் சுற்றி வந்துள்ளார்.

    மன நலம் பாதிக்கப்பட்ட வர் போல காணப்பட்ட அந்த வாலிபரை, ஆட்டோ சங்கத்தினர் அழைத்து விசா ரித்தனர். குடும்பத்தினர் குறித்து விசாரித்த போது அந்த வாலிபர் சில விவரங்களை தெரிவித்தார். இதன் மூலம் அந்த வாலிபர் வழி தவறி வந்ததும் தெரியவந்தது.

    இதுபற்றி எழுத்தாளர் சிவனிசதீஷ் 'வாட்ஸ்அப்' மூலம் இளைஞரை பற்றி தகவல் பரப்பப்பட்டது. மேலும் தக்கலை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக சுமார் ஒரு மணி நேரத்துக்குள் வாலிபரின் குடும்பத்தினரை வடசேரி போலீசார் கண்டு பிடித்த னர்.

    நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள கட்டை யன்விளை பகுதியில் வசித்து வருபவர் அய்யாக்குட்டி. இவரது 2-வது மகன் இசக்கி பாண்டி (வயது 18) என்பவர் தான் தக்கலை பகுதியில் சுற்றித் திரிந்தவர் என தெரியவந்தது.

    அய்யாக்குட்டி பானிபூரி கடை நடத்தி வருவதும் அவருக்குஉதவியாக மகன்கள் இசக்கி ராஜா (23), மற்றும் இசக்கி பாண்டி செயல்பட்டு வந்தனர்.இதில் இசக்கி பாண்டி பிறப்பால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று காலையில் குளிக்க சென்ற அவர், அதன்பிறகு வீட்டிற்கு போக வழி தெரியாமல் இடுப்பில் கட்டிய துண்டு டன் பாதை மாறி சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து தக்கலை காமராஜர் சிலை பக்கம் வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து தக்கலை வந்த அய்யாக்குட்டியிடம் தக்கலை போலீஸ் நிலைய தலைமை காவலர்களின் முன்னிலையில் பொது மக்கள் இசக்கி பாண்டியை ஒப்படைத்தனர்.

    Next Story
    ×