search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இடம் தேர்வு செய்யப்படும் - மேயர் மகேஷ் தகவல்
    X

    வியாபாரிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இடம் தேர்வு செய்யப்படும் - மேயர் மகேஷ் தகவல்

    • வடசேரி கனகமூலம் சந்தை தற்காலிகமாக மாற்றம்
    • வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்தப்பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையை ஆய்வு செய்த அவர், நீராளி குளத்தையும் பார்வை யிட்டார். அதை புணரமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ், நீராளி குளத்தை சுற்றியுள்ள மைதா னத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வடிவீஸ்வரம் பகுதியில் காய்கறி சந்தை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி செயல்பட்டு வருகிறது. நீராளி குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

    ஏற்கனவே வடசேரி சந்தையில் 120 கடைகள் காலியாக தான் இருந்து வருகிறது. சந்தையில் வியா பாரம் செய்து வரும் வியா பாரிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வியாபாரம் பாதிக்காத வகையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போர்வேல்கள் மூலமாகவும், குடிநீர் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. புத்தன் அணையிலிருந்து வெள் ளோட்டமாக கொண்டு வரப்படும் தண்ணீரை, கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்தி லிருந்து பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகி றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், நகர் அதிகாரி ராம்குமார், தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் கோபால் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் ஜான், இளை ஞரணி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    Next Story
    ×