என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் திருடியவர் கைது
- கோவில் உண்டியலை உடைத்து சுமார் ரூ.500-ஐ திருடி உள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி கோவில் உண்டியலை உடைத்து திருடிய செல்வராஜை கைது செய்தனர்.
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம் இரு முறை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் அது போல் நேற்று முன்தினம் கோவிலில் வழிபாடுகள் முடிந்து இரவு சென்ற பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 43) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து சுமார் ரூ.500-ஐ திருடி உள்ளார். மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டெம்போவில் இருந்த செல்போனையும் திருடி உள்ளார்.
இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விசாரணை நடத்தி கோவில் உண்டியலை உடைத்து திருடிய செல்வராஜை கைது செய்தனர்.
Next Story