search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் உள்ள முதியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி பராமரிக்க வேண்டும்
    X

    வீட்டில் உள்ள முதியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி பராமரிக்க வேண்டும்

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிக்கை
    • 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட தோட்டியோட்டில் செயல்பட்டுவரும் பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதி மற்றும் அழகிய மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பிலாங்காலை முதியோர் இல்லம் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் நேரடியாக பேசிய அவர் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுவதார் கிரஹக் என்ற பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதியானது சுரக்க்ஷா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடம் ஏற்பாடு, ஆலோசனை மையம் அதனுடன் சுயதொழில் என பெண்களுக்காக பல்வேறு உதவிகள் இம்மையம் ஏற்படுத்தி உள்ளது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களை 5 நாட்கள் வரை இங்கு தங்க வைக்கலாம். இருப்பினும், நீண்ட கால தங்கும் தேவைக்காக, அத்தகைய பெண்கள் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது 18 வயதிற்கு குறைந்த துன்பப்பட்ட அல்லது ஆதரவற்ற பெண்கள், சக்தி சதனுக்கு பரிந்துரைக்கப்படு வார்கள்.

    அங்கு அவர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தங்கலாம். சக்தி சதனில் தங்குவதற்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்படலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் தேவை அடிப்படையில் இருப்பினும், 55 வயதுக்கு மேற்பட்ட வயதான பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கலாம். அதன் பிறகு அவர்கள் முதியோர் இல்லங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டும். மேலும் இக்குறுகிய கால தங்கும் விடுதியில் இருந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. மாவட் டத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தொடர்பாக வரும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது.

    மூத்த குடிமக்கள் உதவி எண் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வழிதவறியவர்கள் மற்றும் கைவிடப்பட்ட முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க உதவுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    முதியோர் உதவி எண்ணில் அழைக்கும் போது முதி யோர்களின் உடல்ரீதியான, பாதுகாப்பு, மனநல ஆலோ சனை, சுகாதார தேவைகள் தொடர்பான வழிகாட்டுதல் உறுதி செய்து கொடுக்கப்படு கிறது. மாவட்டத்தில் தற்போது 31 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பிள்ளைகளால் கைவிடப் படும் முதியோர்களை பாதுகாத்து அவர்களிடம் அன்பும் பாசமும் காட்டி மூத்த குடிமக்களை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். பிலாங்காலை மற்றும் மாத்தார் முதியோர் இல்லங்களில் 129 முதி யோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முதியோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றது.

    முதியோர் உதவி எண் 14567 ஆகும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மூத்த குடிமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அவர்களின் குறைகள் அறியப்பட்டு தீர்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் வழக்கு தொடர் பாக மாவட்ட ஆட்சியரின் தீர்ப்பே இறுதியானது ஆகும். எந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் ஆட்சியரின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக கருதப்படும்.

    எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்க ளுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை சிறந்த முறையில் பராமரித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பிலாங்காலை முதியோர் இல்லத்தில் கொண்டாடப் பட்ட சர்வதேச முதியோர் தினவிழாவில், கலெக்டர் ஸ்ரீதர் முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, குறுகிய கால தங்கும் விடுதி தலைவர் சாந்தா பாலகிருஷ்ணன், மாத்தார் மற்றும் பிலாங் காலை முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் முதி யோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×