என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்மனை அருகே சேதமான நிலையில் உள்ள இரும்பு பாலத்தை மாற்ற வேண்டும் - கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை
- 3-வது வார்டுக்கு உட்பட்டது அரியாம்போடு. இந்தப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
- பாலத்தை சீரமைக்க வேண்டி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தும் போது, அதிகாரிகள் வந்து பேசி மாற்று பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி கொடுப்பார்கள்.
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பேரூராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்டது அரியாம்போடு. இந்தப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
பேச்சிபாறையில் இருந்து செல்லும் கோதையாறு பரளியாறு சானல் இந்த பகுதி வழியாக தான் பாய்ந்து மங்கலம், பொன்மனை, சுருளோடு வழியாக நாகர்கோவில் சென்றடைகிறது. அரியாம் போடு பகுதி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக சானலின் மேற்பகுதியில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாலம் அமைக்க ப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவில் ஓட்டை விழுந்து உள்ளது.
அரியாம்போடு சானலின் மறு பக்கம் வசித்து வரும் குடும்பங்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த இரும்பு பாலத்தின் வழியாக தான் வர வேண்டும். தினமும் காலை, மாலை வேளை களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பாலத்தின் வழி யாக தான் செல்ல வேண்டும்.
அவர்கள் இருசக்கர வாகனத்தில் பாலத்தின் வழியாக சென்று வருகின்ற னர்.எனவே மக்களின் நலன் கருதி பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது ெதாடர்பாக அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:-
பாலத்தை சீரமைக்க வேண்டி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தும் போது, அதிகாரிகள் வந்து பேசி மாற்று பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி கொடுப்பார்கள்.
தேர்தல் நேரங்களில் வாக்கை பெறுவதற்கு மாற்று பாலம் அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி கொடுப்பார்கள். தேர்தல் முடிந்ததும் அதை மறந்து விடுவார்கள். மழை வெள்ளம் காலங்களில் இந்த பாலத்தை தொட்டுதான் தண்ணீர் செல்லும்.
அப்போது இப்பகுதி மக்கள் பெரும் கஷ்டப்பட்டு தான் பாலத்தை கடந்து செல்லவேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாலம் சரிசெய்ய டெண்டர் போடப்பட்டது. அதன்பிறகு எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே பெரும் விபத்து க்கள் நடைபெறும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை மாற்றி வேறு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






