search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்.புனித சிலுவை மகளிர் கல்லூரியில் 1990-ம் ஆண்டு படித்துமுடித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க ஒன்று கூடிய மாணவிகள்
    X

    நாகர்.புனித சிலுவை மகளிர் கல்லூரியில் 1990-ம் ஆண்டு படித்துமுடித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க ஒன்று கூடிய மாணவிகள்

    • ராஜேஸ்வரி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்லூரி தோழிகளை மீண்டும் ஒன்று சேர்க்க வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினார்.
    • 32 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மகிழ்ச்சியுடன் பரிமாறி கொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புனித சிலுவை மகளிர் கல்லூரியில் 1990-ம் ஆண்டு வணிகவியல் துறையில் படித்து முடித்த மாணவிகள் தற்போது திருமணமாகி வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும், வெளிமாவட்டங்களிலும் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் சென்னையில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்லூரி தோழிகளை மீண்டும் ஒன்று சேர்க்க வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினார்.

    இதன்மூலம் தன்னுடன் படித்த தோழிகள் அனைவரையும் ஒன்றிணைத்தார். இதில் சிலர் இறந்து போனதும், பலர் வெளிநாடுகளில் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

    பின்னர் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து சந்திக்க ஏற்பாடு செய்தார். படித்த கல்லூரியிலேயே இந்த சந்திப்பு நடந்தது. இதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பெண்கள் வந்தனர்.

    அவர்கள் கல்லூரியில் தாங்கள் படித்த வகுப்பறையிலேயே ஒன்று கூடி கேக் வெட்டியும், 32 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் பரிமாறி கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×