search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்று 1400 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
    X

    குமரி மாவட்டத்தில் இன்று 1400 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

    • 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை குமரி மாவட்டத்தில் 82 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும் சுமார் 75 சதவீதம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதே போல் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை.

    இதையடுத்து அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று மாவட்டம் முழுவதும் 1400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் 50 இடங்களில் மெகா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வடிவீஸ்வரம், வடசேரி, தொல்லை விளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.

    இதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரெயில் நிலையத்திலும் தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்டு 2 தடுப்பூசிகளும் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்களில் கூட்டம் குறைவாக இருந்தது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த வந்தவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடப்பட்டது. கன்னியாகுமரியிலும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

    வெளியூரில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் உதவியுடன் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மெகா தடுப்பூசி முகாமில் இன்று கூட்டம் குறைவாகவே இருந்தது. பூஸ்டர் தடுப்புச் செலுத்துவதற்கு இளைஞர்கள் இளம் பெண்கள் ஆர்வமாக வந்திருந்தனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த மெகா தடுப்பூசி முகாமில் மதியம் 1 மணி வரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.மாலை வரை தடுப்பூசி போடப்படும். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தி ரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள மையங் களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளு மாறு கலெக்டர் அரவிந்த் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×