search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்
    X

    கன்னியாகுமரியில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்

    • சங்கிலித்துறை கடற்கரையில் ரசாயனகலவை மூலம் பாசிகள் அகற்றம்
    • நாளை ஆடி அமாவாசை விழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை நாளில் லட்சக்க ணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு நாளை (16-ந் தேதி) ஆடி அமாவாசை விழா கொண்டாடப்படு கிறது. ஆடி அமாவாசையை யொட்டி குமரி மாவட்டத் துக்கு நாளை உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள் என்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. தர்ப்பணம் கொடுப்பவர்கள் அமரும் இடம், நீராடும் படித்துறை போன்றவை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் உள்ள படித்துறையில் படிந்திருந்த பாசிகள், ரசாயண கலவை மூலம் அகற்றப்பட்டது.

    நாளை பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்வார்கள். எனவே அங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. நாளை அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கி றது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழை வாசல் திறக்கப்பட்டு பக்தர் கள் தரிசனத்துக்கு அனும திக்கப் படுகிறார்கள். இதற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பி னர்கள், நாகர் கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண் காணிப்பாளரும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கன்னியாகுமரி வரும் பக்தர்கள் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குக நாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்த புரத்தில் உள்ள சர்க்கரதீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    பக்தர்கள் அதிக அளவில் கன்னியாகுமரி வருவார்கள் என்பதால், அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்க ளில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் தலைமை யில் பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×