search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் ஒரு நிமிடம் தெரிந்த சூரிய கிரகணம்
    X

    கன்னியாகுமரியில் தெரிந்த சூரிய கிரகணத்தை படத்தில் காணலாம்

    கன்னியாகுமரியில் ஒரு நிமிடம் தெரிந்த சூரிய கிரகணம்

    • சூரிய கிரகணம் நேற்று மாலை 5.17 மணிக்கு தொடங்கி 6.20 மணி வரை நீடித்தது.
    • பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைத்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    சூரிய கிரகணம் நேற்று மாலை 5.17 மணிக்கு தொடங்கி 6.20 மணி வரை நீடித்தது. இந்த கிரகணம் கன்னியாகுமரியில் ஒரு சில நிமிட நேரம் மட்டும் தெரிந்தது.

    இதை கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சூரிய அஸ்தமன கடற்கரையில் நின்றபடி பைனாகுலர் மூலம் பார்த்தனர். சிலர் தங்களது செல்போன்களில் அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று மாலை 3 மணி நேரம் நடை அடைக்கப்பட்டுஇருந்தது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இந்த 3 மணி நேரமும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. சூரிய கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைத்து இருந்தனர்.

    சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×