என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இதுவரை 800 புகார் மனுக்களுக்கு தீர்வு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேட்டி
    X

    இதுவரை 800 புகார் மனுக்களுக்கு தீர்வு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேட்டி

    • பாதிரியாரின் ஆபாச படங்களை பரப்பியோர் மீது நடவடிக்கை
    • மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளது. இந்த முகாம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    நாகர்கோவில், மார்ச்.22-

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்ப்பட்டு அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் புதன் கிழமை மாவட்டத்தில் உள்ள 4 சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கி யிருந்த புகார் மனுக்களை நேரடியாக விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டதை தொடர்ந்து புகார் மனுதாரர்கள், எதிர்மனு தாரர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு வரவ ழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்றும் புகார்மனுதாரர்கள் எதிர்மனு தாரர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவ ழைக்கப்பட்டிருந்தனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோ வில் தக்கலை குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 100 பேர் விசாரணைக்கு வந்திருந்த னர். புகார் மனு தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் விசா ரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரடி விசாரணை மேற் கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார் அளிப்பார்கள். அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் செய்வார்கள். இதை தவிர்க்கும் பொருட்டு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தால் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

    முதலில் தினமும் 100 மனுக்கள் வந்து கொண்டி ருந்தது. தற்பொழுது மனுக்களின் வருகை குறைந்துள்ளது. இதுவரை 800 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளது. இந்த முகாம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சைபர் கிரைம் போலீசாரால் கைது செய் யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்டால் பாதிரி யாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவ டிக்கை எடுக்கப்படும். பாதிரி யாரின் ஆபாச படங் களை வெளியிட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுப்பது தொடர் பாக பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.பெண் களின் ஆபாச படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×