search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தயார் நிலையில் தற்காலிக முகாம்கள் - கலெக்டர் அரவிந்த் பேட்டி
    X

    குமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தயார் நிலையில் தற்காலிக முகாம்கள் - கலெக்டர் அரவிந்த் பேட்டி

    • குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது
    • 4 தாலுகாக்களிலும் துணை தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க ப்பட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. முதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்டும் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று குறைவாகவே பெய்து உள்ளது. நேற்று 4.9 சென்டி மீட்டர் மழை சராசரியாக மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. அணைகளின் நீர்மட்டத்தையும் கண்காணித்து வருகிறோம்.

    பேச்சிப்பாறை அணை 38 அடியாகவும் பெருஞ்சாணி அணை 63 அடியாகவும் சிற்றாறு-1,சிற்றார்-2அணைகள் 12 அடியாகவும் உள்ளது. மலையோர பகுதிகளில் மழை பெய்தாலும் உடனடி யாக அணைகளில் இருந்து தண்ணீரை திறக்க வாய்ப்பு இல்லை. அணைகளில் தண்ணீரை சேகரித்து வைக்கலாம்.

    ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதன் காரணமாக அருவியல் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பேரிடர் மீட்பு குழுவி னர் இன்று வருகை தந்து உள்ளனர். அதிக மழை பெய்யும் என்பதால் பள்ளி களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. மக்கள் மழை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.ஆறுகளில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஆறுகளில் குளித்த போது தான் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இழப்புகளை தடுக்க பொது மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் 76 இடங்கள் தாழ்வான பகுதி களாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 22 இடங்கள் மிகவும் தாழ்வான பகுதி களாகும். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில்2 இடங்களும், தோவாளையில் 4 இடங்க ளும், கல்குளத்தில் ஒரு இட மும், குருந்தன் கோட்டில் 3 இடங்களும், திருவட்டா ரில்7 இடங்களும், கிள்ளி யூரில் 5 இடங்களும் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்ப ட்டுள்ளது.

    அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளோம். இதற்காக தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் தாலுகா வில் 12 இடங்களும் தோவா ளையில் 7 இடங்களும், கல்குளத்தில் 4 இடங்களும் குருந்தன் கோட்டில் 9 இடங்களும் திருவட்டாரில் 7 இடங்களும் கிள்ளியூரில் 11 இடங்களும் தயார் நிலை யில் வைக்கப்பட்டு உள்ளது.

    4 தாலுகாக்களிலும் துணை தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க ப்பட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×