search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்றும் மழை நீடிப்பு

    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு
    • இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுவும் புறநகர் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெள்ளமாக கொட்டியதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் வேகம் 2 நாட்கள் குறைந்து காணப்பட்டது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் நேற்று மாலை மீண்டும் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கோழிப்போர்வி ளையில் 55.2 மில்லி மீட்டரும் இரணியலில் 42 மில்லி மீட்டரும் குருந்தன்கோட்டில் 36.2 மில்லிமீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 41.40 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 69.68 அடியாக உள்ளது.

    குமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. இந்த நிலையில் காலை 9.30 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவில், சாமிதோப்பு, கொட்டாரம் என பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள்.

    குறிப்பாக பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலக பணிக்குச் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    Next Story
    ×