search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் சானலில் ஷட்டர் அடைக்கும் போராட்டம்
    X

    ராதாபுரம் சானலில் ஷட்டர் அடைக்கும் போராட்டம்

    • காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி அறிவிப்பு
    • பொதுப்பணி துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிற்றாறு பட்டணம் கால்வாய் பாழடைந்துள்ளது

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரு போக விவசாயம் செய்ய பெரிதும் உதவியாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய திட்டம் சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டமாகும்.

    ஆனால் அந்த திட்டமானது குமரி மாவட்ட பொதுப்பணிதுறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிற்றாறு பட்டணம் கால்வாய் முற்றிலும் பாழடைந்து காணப்படுகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக பட்டணம் கால்வாய் தூர்வாரி பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கடை வரம்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பயிர் மற்றும் வாழைகள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளன. விவசாயிகளின் பிரச்சனைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக எடுத்து கூறியும் சானல்களை தூர்வார இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    ஆனால் குமரி மாவட்டத்தில் இருந்து ராதாபுரம் வழியாக செல்லும் சானல் எந்தவித பழுதுமின்றி தங்கு தடை இன்றி தண்ணீர் சென்று கொண்டிருப்பது குமரி மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்ட தண்ணீர் மாவட்டத்தில் உள்ள சானல்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை. ஆனால் ராதாபுரம் சானலில் தண்ணீர் திறந்த நாள் முதல் இதுவரைக்கும் தண்ணீர் தங்கு தடை இன்றி சென்று வருகிறது.

    ஜூலை 15-ந்தேதிக்குள் சிற்றாறு பட்டணம் கால்வாய் பழுதுகளை சரி செய்து தூர்வாரி கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குமரி மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ராதாபுரம் சானலில் ஷட்டர்களை அடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×