search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி வருகை
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி வருகை

    • கன்னியாகுமரியில் கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

    கன்னியாகுமரி :

    கேரளாவில் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மறுநாள் (18-ந்தேதி) கன்னியாகுமரி வருகிறார்.

    பகல் 12 மணிக்கு திருவனந் தபுரத்தில்இருந்துஹெலி காப்டர் மூலம் புறப்படும் அவர் 12.30 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிடும் அவர், விவேகானந்தபு ரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கும் செல்கிறார்.

    அங்கு உள்ள ராமா யண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா சிலையை பார்வையிடுகிறார்.பின்னர் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சியை பார்வை யிடும் அவர் பகவதி அம்மன் கோவிலுக்கும் செல்கிறார்.

    ஜனாதிபதி வருகை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுஉள்ளன. அரசு விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் இறங்கு தளம், விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதி களில் போலீசார் தற்போது முதலே பாதுகாப்பு நட வடிக்கைகளை தொடங்கி விட்டனர்.இதனை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட சிறப்பு வருவாய்அதிகாரி ரேவதி, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள்நேரில்சென்று ஆய்வு செய்தனர்.

    அவர்கள் விவகோனந்தர் நினைவு மண்டபம் உள் ளிட்ட பகுதிகளை பார்வை யிட்டனர். ஜனாதிபதி வருகை யொட்டி ஹெலி காப்டர் ஒத்திகை நிகழ்ச்சி யும் நடத்தப்பட்டது.

    Next Story
    ×