என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல்கள் சோதனை
    • மங்களூருவில் குண்டு வெடிப்பு எதிரொலி

    நாகர்கோவில்:

    கர்நாடக மாநிலம் மங்களூர் நகர் நாகுரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் மங்களூரில் நாச வேலைக்கு திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மங்களூரில் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழு வதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சர்வதேச சுற்று லாத்தலமான கன்னியா குமரியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    களியக்காவிளை அஞ்சுகிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி நாகர்கோ வில் குளச்சல் தக்கலை சப் டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோத னையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர். பிளாட்பாரங்களில் சுற்றி வந்த போலீசார் ரெயில்களிலும் கண்காணிப்பணியை மேற்கொண்டனர்.

    ரெயில்வே தண்ட வாளங்களிலும் சோ தனை நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து வெளியூருக்கு அனுப்பு வதற்காக வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர். வெளியூர்களில் இருந்து வந்த பார்சல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக காலை முதலே சோதனை நடந்து வருகிறது.

    வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீ சார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார் கள். கன்னியாகுமரி, குழித் துறை, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல் ரெயில் நிலை யங்களிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×