search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் ரூ.1½ கோடி செலவில் புதிய தார்ச்சாலை
    X

    கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் ரூ.1½ கோடி செலவில் புதிய தார்ச்சாலை

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • அலங்கார தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அஞ்சுகூட்டுவிளை சர்ச் செல்லும் சாலையில் ரூ.38 லட்சம் செலவிலும், கோவளம் டோல்கேட் முதல் லிங்க் ரோடு வரை ரூ.34 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும், நாகர்கோவில் மெயின் ரோடு முதல் சி.எஸ்.ஐ. சர்ச் வரை ரூ.20 லட்சத்து 70 ஆயிரம் செலவிலும், சின்னமுட்டம் படகு கட்டும் தளம்செல்லும் சாலையில் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும் புதியதார்சாலை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் பாலசுப்பிர மணியபுரம் மற்றும் ஒற்றையால்விளை கிழக்குத்தெரு முதல் மெயின் ரோடு வரை ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அலங்கார தரைத்தளம் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.1 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நடைபெற உள்ள இந்த திட்டப்பணிகளின் தொடக்க விழா நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தி.மு.க. வர்த்தக அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி இளநிலை பொறியாளர் பாபு, சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார் வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×