என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தக்கலை அருகே தி.மு.க. பிரமுகரின் சகோதரர் மர்ம சாவு - அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை
  X

  தக்கலை அருகே தி.மு.க. பிரமுகரின் சகோதரர் மர்ம சாவு - அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு வடிகால் ஓடையில் வாலிபர் ஒருவரின் உடல் கவிழ்ந்த நிலையில் உள்ளதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் வந்தது.
  • இவரது தந்தை சிறந்த நாடக ஆசிரியர் விருதினை தமிழக அரசிடமிருந்து பெற்றவர்

  கன்னியாகுமரி :

  தக்கலை அருகே கொற்றி கோடு பிலாங்கன்று விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது31).திருமணம் ஆகவில்லை.

  இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் முட்டைக்காடு பகுதியில் உணவருந்த சென்றார். பின்பு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடனே உறவினர்கள் இவரை தேடி அலைந்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை முட்டைக்காடு பகுதியில் உள்ள ஒரு வடிகால் ஓடையில் வாலிபர் ஒருவரின் உடல் கவிழ்ந்த நிலையில் உள்ளதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் வந்தது.

  உடனே கொற்றிகோடு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் தலைமையில் விரைந்து சென்று உடலை கைபற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

  டாக்டர் இவரை பரிசோதனை செய்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடந்து போலீசார் விசாரனையில் முட்டை க்காட்டில் உணவருந்த சென்ற ஜெகதீஷ் என தெரியவந்தது. போலீசார் உறவினருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே இறந்து போன ஜெகதீசின் சகோதரர் ஜெயபாஸ் கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் இவரை யாராவது அடித்து கொலை செய்து ஓடையில் தூக்கி வீசப்பட்டாரா இல்லை நிலை தடுமாறி விழுந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.

  மர்மமான முறையில் இறந்த ஜெகதீசின் சகோதரர் குமாரபுரம் பேரூர் திமுக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.

  இவரது தந்தை சிறந்த நாடக ஆசிரியர் விருதினை தமிழக அரசிடமிருந்து பெற்றவர் என்பது குறிப்பி டத்தக்கது.

  Next Story
  ×