search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்.பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி
    X

    நாகர்.பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி

    • கைதான நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேர் சென்னை புழல் ஜெயிலில் அடைப்பு
    • 22 செல்போன்கள், 26 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பியூட்டி பார்லர் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் லண்டனில் பணியாற்று வதாகவும் விரைவில் ஊருக்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார். குடும்ப விவரங்களை கூறியவர் தான் பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் அதிக சம்பளம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

    முதலில் சாதாரணமாக பேசிய நபர் பின்னர் இந்த பெண்ணின் குடும்ப நண்பராக மாறினார். திடீரென இந்த பெண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர் அழகான பரிசு பொருட்கள் அனுப்பி வைத்துள்ளேன். வீட்டிற்கு வரும் பார்சலை பெற்றுக் கொள்ளவும் என்று தெரிவித்தார்.

    பின்னர் 2 நாட்கள் கழித்து சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக பெண்ணை தொடர்பு கொண்ட மற்றொரு நபர், உங்கள் பெயரில் விலை உயர்ந்த பரிசு பொருட்களு டன் கூடிய பார்சல் வந்துள்ளது. இந்த பார்சலை பெற வேண்டும் என்றால் அதற்கு உண்டான வரியை செலுத்த வேண்டும். வரி செலுத்தாவிட்டால் பார்சலை திரும்ப அனுப்பி வைத்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

    இவ்வாறாக பல்வேறு தவணைகளில் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் வரை அந்த பெண் செலுத்தினார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். இதில் டெல்லியில் இருந்து அவ்வப்போது அழைப்புகள் வந்திருந்தது உறுதியானது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி வரை சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த பாஸ்கல் பாங்கூரா (36), மார்ட்டின் டபேரே (24) என்பது தெரியவந்தது.

    பின்னர் இருவரையும் டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 22 செல்போன்கள், 26 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் வேறு நபர்களை ஏமாற்றி யுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாஸ்கல் பாங்கூரா, மார்ட்டின் டபேரே இருவரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் இருவரையும் சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×