என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முளகுமூடு மறைவட்ட மூத்த குடிமக்கள் தினவிழா
  X

  மூத்த குடிமக்கள் தினவிழா நடந்தபோது எடுத்த படம் 

  முளகுமூடு மறைவட்ட மூத்த குடிமக்கள் தினவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா வளாகத்தில் நடைபெற்றது.
  • குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசுரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

  தக்கலை, அக்.31-

  முளகுமூடு மறைவட்ட மூத்த குடிமக்கள் தின விழா முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா வளாகத்தில், குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசுரத்தி னம் தலைமையில் நடைபெற்றது.

  முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் அறிமுக உரையாற்றினார். குழித்துறை மறைமாவட்ட வார்த்தை வழிபாட்டு பணி குழுக்களின் செயலாளர் செலஸ்டின் ஜெரால்ட், தூய மரியன்னை பசலிக்கா அதிபர் டொமினிக் எம் கடாட்சதாஸ், முளகுமூடு வட்டார கிட்ஸ் இயக்குனர் எலியாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

  சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் குமரி ஆதவன் கலந்து கொண்டு, மூத்தக் குடிமக்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான வழிகள் குறித்துப் பேசினார். சமூக நலத்துறை பொறுப்பாளர் அமுதா முதியோர்களுக்கான அரசு சார்ந்த உதவிகள் என்னென்ன என்று பேசினார்.

  முன்னதாக மறைவட்ட அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மறை மாவட்ட பொதுநிலையினர் பணிக்குழு தலைவர் எட்வர்ட் ஆஸ்டின் நன்றி கூறினார். தொட ர்ந்து முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமையில் திருப்பலியும் அன்பின் விருந்தும் நடைபெற்றது.

  இதில் அருட்தந்தையர்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பொதுநிலையினர் பணிக்குழு செயலர் ஜான்சி, பொருளார் ரோஸ்மேரி, மேப்புப் பணி பேரவை செயலர் சிபி மோள் உட்பட பலர் இணைந்து செய்தனர். நிகழ்வில் 1500 க்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×