search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது- பரபரப்பு
    X

    கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது- பரபரப்பு

    • சேரிவிளை, காரவிளை பகுதியில் தலித் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி
    • தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டங்கள்

    நாகர்கோவில் : விளவங்கோடு தாலுகா நல்லூர் வருவாய் கிராமத் திற்குட்பட்ட சேரிவிளை, காரவிளை பகுதியில் தலித் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்ததுடன் அங்கிருந்த சுற்றுச்சுவரை இடித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட் டது.

    ஆனால் இதுவரை போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தினகரன் உள்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×