search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் ரூ.92 லட்சம் மோசடி வழக்கில் கைதான தம்பதியினர் மீது மேலும் புகார்கள் குவிகிறது
    X

    குமரியில் ரூ.92 லட்சம் மோசடி வழக்கில் கைதான தம்பதியினர் மீது மேலும் புகார்கள் குவிகிறது

    • தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
    • 23 பேரிடம் தலா ரூ.4லட்சம் வீதம் ரூ.92 லட்சம் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் 23 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    நாகர்கோவில், ஆக.28-

    இரணியல் அருகே உள்ள ஆளூர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி ஜமுனா (வயது 47).இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் வில்லுக்குறி குதிரை பந்தவிளை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (29), அவரது மனைவி நிஷா வருணி (26) ஆகியோர் எனது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.அப்போது அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    ராம்குமார் ரெயில்வே அதிகாரி என்றும், நிஷா வருணி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தனர். ராம்குமார் தனக்கு ரெயில்வே துறையில் பல அதிகாரிகளை தெரியும் என்று கூறினார்.தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து எனது உறவினர்கள் உறவினர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் வாங்கி கொடுத்தேன். இதே போல் 23 பேரிடம் தலா ரூ.4லட்சம் வீதம் ரூ.92 லட்சம் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் 23 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவானார்கள். எனவே அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராம்குமார், நிஷா பரணி மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.விசாரணை யில் பல திடுக்கிடும் தக வல்கள் வெளியானது.

    ராம்குமார், நிஷா வருணி தம்பதியினர் பொது மக்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளனர். ராம்குமார் ெரயில்வே அதிகாரி என்றும் நிஷாவருணி டாக்டர் எனவும் கூறியுள்ளனர். 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் இருந்து அவர்கள் மோசடியை தொடங்கி யுள்ளனர். ெரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பொது மக்களிடம் ஏமாற்றி பணம் வாங்கியது தெரிய வந்துள்ளது.

    குமரி மாவட்டம் மட்டு மின்றி கோயம்புத்தூரிலும் பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளனர். குமரி மாவட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதை யடுத்து இவர்கள் கடந்த ஆண்டு கோயம்புத்தூருக்கு சென்றுள்ளனர்.

    கோயம்புத்தூரில் 7 மாத காலமாக இருந்துள் ளனர். அங்கு உள்ள மக்களிடமும் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் டாக்டர் என்று கூறி சிகிச்சை அளித்ததில் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இரு வரும் பண மோசடியில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ராம்குமார், நிஷாவருணி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னர். பின்னர் ராம்குமார் நாகர்கோவில் ஜெயிலி லும், நிஷாவருணி தக்கலை ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மேலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×