என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு - உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி
- 52-வது வார்டு காட்டுவிளை கலைஞர் நகரில் தேசிய நகர்ப்புற நல திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய நலவாழ்வு மையம்
- மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்
நாகர்கோவில் :
குளச்சல் அரசு மருத்துவ மனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்களிடம் நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குளச்சல அரசு மருத்துவ மனைக்கு தேவையான உள் கட்டமைப்பு குறித்து முதல்-அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை யில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52-வது வார்டு காட்டுவிளை கலைஞர் நகரில் தேசிய நகர்ப்புற நல திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய நலவாழ்வு மையம் அமைப்பதற்கான பணியினை தொடங்கி வைத்தார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், குளச்சல் நகர் மன்றத்தலைவர் நசீர், குளச்சல் நகராட்சி ஆணையாளர் (பொ) ஜீவா, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், ஜவஹர், சுகாதார அலுவலர் பிச்சை பாஸ்கர், வக்கீல் சதாசிவம், பொதுப்பணி மேற்பார்வை யாளர் பிரம்மசக்தி, சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன், லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.