என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலயத்தில் கூட்டுத் திருப்பலி
- ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடந்தது
- ஆலயத்தில் கடந்த 22-ந்தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலயத்தில் கடந்த 22-ந்தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரை போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. 7-ம் திருவிழாவான நேற்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பவுவத்துப்பறம்பில் மற்றும் பங்கு மக்கள் பங்கேற்றனர்.விழாவின் 8-ம் திருநாளான இன்று காலை திருப்பலி நடந்தது. மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் இரவில் நற்கருைண ஆராதனை, நற்கருணை பவனியும் நடக்கிறது.
நாளை (30-ந் தேதி) காலை திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கின்றன. 10-ம் திருநாளன்று (31-ந் தேதி) தக்கலை மறைமாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு பங்குகளில் இருந்து வரும் இைறமக்கள் புனித அல்போன்சா திருத்தலம் நோக்கி புனிதப் பயணம் செல்கிறார்கள்.
காலை 9 மணிக்கு தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பவுவத்துப்ப றம்பில் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்பிறகு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது.
பகல் 12.30 மணிக்கு திருத்தேர் பவனியும், 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்தும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.






