search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் கோவிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    X

    திருவட்டார் கோவிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    • கோவில் கும்பாபிஷேகத்திற்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது
    • பாதுகாப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி பாது காப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் பக்தர்கள் உள்ளே வரும் பாதையும் வெளியே செல்லும் பாதையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    அவருடன் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, தக்கலை டி.எஸ்.பி. கணேசன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் மோகன் குமார், திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், தலைவர் பென்னிலா ரமேஷ், துணைத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    இவர்கள் கோவிலின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து கோயில் வரும் பக்தர்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து வாக னங்களை எல்லாம் ஒழுங்கு படுத்துவதற்கான இடங்களையும் பார்த்து ஆய்வு செய்தனர்.

    எந்தெந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மாட்ட வேண்டும், சிறப்பு விருந்தினர்களுக்கான வாகனங்களையும் எங்கெங்கே நிறுத்த வேண் டும் ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தனர். கோவில் கும்பாபிஷேகத்திற்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவட்டார் சிறப்பு தாசில்தார் இசபெல்லா, கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, குலசேகரம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×